Saturday, July 26, 2014

உலகத்திலுள்ள மிக அதி பயங்கரமான 6 எரிமலைகள்!!!

ஜப்பானில் உள்ள சகுரஜிமா சகுரஜிமா  
    என்ற தனிப்பட்ட தீவில், 1914-ல் தொடர்ச்சியான பல எரிமலை கக்குதல்கள் மற்றும் எரிமலைக்குழம்பு வழிதல்கள் நடந்த பிறகு, அது நிலப்பகுதியில் இணைந்தது. சகுரஜிமாவில் ஒவ்வொரு வருடமும் சிறிய வெடித்தல்கள் நூற்றுக்கணக்கில் நடக்கிறது. இதனால் இந்த எரிமலையும் உலகத்தில் உள்ள ஆபத்தான எரிமலைகளில் ஒன்றாக விளங்குகிறது.
கலேராஸ், கொலம்பியா
    கொலம்பியாவில் உள்ள கலேராஸ் என்ற இடம் எக்குவடோர் எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த எரிமலையை பற்றி ஒரு சுவாரசியம் அடங்கியுள்ளது. அதாவது இது கடந்த 10 லட்ச வருடமாக உள்ளது. உலகத்தில் உள்ள பழமையான எரிமலைகளில் ஒன்றான இது, 1978-ல் செயலற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 10 வருடம் கழித்து, 1988-ல், மீண்டும் இது பொங்கத் தொடங்கியது. 2000-ல் இதனை சுற்றியுள்ள பகுதியில் தீக்குழம்புகளை மிகவும் ஆவேசமாக கக்க தொடங்கியது.
நியரன்கொங்கா மலை, 
   DRC உலகத்தில் உள்ள சக்தி வாய்ந்த எரிமலைகளில் ஒன்றான இது, ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள நியரன்கொங்கா மலையில், காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ளது. இந்த இடம் இங்குள்ள எரிமலைக்குழம்பு ஏரிகளுக்காக புகழ் பெற்றுள்ளது. உலகத்தில் உள்ள பயப்பட வைக்கும் எரிமலைகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. மேலும் இந்த வட்டாரத்தில் வாழ்பவர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த எரிமலை.

டால் எரிமலை, 
    பிலிப்பைன்ஸ் 1600-களில் டால் எரிமலையில் கிட்டத்தட்ட 30 பெருத்த வெடித்தல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வெடித்தல்களால் மகத்தான அளவிலான எரிமலைக்குழம்பு வெளிவந்துள்ளது. இந்த எரிமலை ஒவ்வொரு முறை எரிமலைக்குழம்பு கக்கும் போது, கிட்டத்தட்ட 6000 பேர்களின் உயிர்களை பறித்துள்ளது.
  
மௌனா லோ, 
    ஹவாய் ஹவாயில் உள்ள மௌனா லோ என்ற இடத்தில் உள்ள எரிமலை மிகவும் ஆபத்தான எரிமலையாக கருதப்படுகிறது. 2000-ல் உலகத்தில் உள்ள மிக ஆபத்தான எரிமலைகளை விஞ்ஞானிகள் பட்டியலிட்ட போது, இந்த எரிமலை தான் முதல் இடத்தை பிடித்தது. பசிபிக் பெருங்கடலின் நடுவில் ஹவாய் தீவு உருவாவதற்கு காரணமாக விளங்கிய 5 சக்தி வாய்ந்த எரிமலைகளில் இதுவும் ஒன்றாகும். கடந்த 700,000 வருடங்களாக இந்த எரிமலையில் அடிக்கடி எரிமலை கக்குதல்கள் நடைபெற்று கொண்டே இருக்கிறது.
வெசுவியஸ் மலை
      இத்தாலி சமீப காலமாக ஏற்பட்டுள்ள சில எரிமலை கக்குதல்கள், இத்தாலியில் உள்ள கம்பக்நியா என்ற இடத்திலுள்ள வெசுவியஸ் மலையை மிகவும் ஆபத்தான எரிமலையாக ஆக்கியுள்ளது. 20 வருடத்திற்கு ஒரு முறை வெசுவியஸ் மலையில் எரிமலை கக்குதல் நடைபெறுமாம். மேலும் மிகவும் அடர்ந்த ஜனத்தொகை வாழும் இடத்திலுள்ளது இந்த வெசுவியஸ் மலை. இதனை சுற்றி கிட்டத்தட்ட 30 லட்ச மக்கள் வசிக்கின்றனர். அதனால் தான் என்னவோ உலகத்தில் மிகவும் நெருக்கமான ஜனத்தொகையை கொண்ட இடமாக விளங்குகிறது வெசுவியஸ் மலை.



முதல் வாரம் ரூ 20 கோடி வசூல் குவித்த தனுஷின் வேலையில்லா பட்டதாரி! Read more at: http://tamil.oneindia.in/movies/news/dhanush-s-vip-turns-big-hit-207019.html

 
முதல் வாரம் ரூ 20 கோடி வசூல் குவித்த தனுஷின் வேலையில்லா பட்டதாரி! வேலையில்லா பட்டதாரி     தனுஷ் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வேலையில்லா பட்டதாரி படம், முதல் வாரத்தில் ரூ 20 கோடியை வசூலித்துள்ளது. தனுஷ், அமலா பால் நடிக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்கிய படம் வேலையில்லா பட்டதாரி. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியானது. முதல் வாரம் ரூ 20 கோடி வசூல் குவித்த தனுஷின் வேலையில்லா பட்டதாரி! வேலையில்லா பட்டதாரி படத்துக்கு ஆதரவாகவே பெரும்பாலான விமர்சனங்கள் அமைந்தன. அதையும் தாண்டி படத்துக்கு ரசிகர்களின் வாய்மொழி விளம்பரம் பெரும் பலமாக அமைந்துவிட்டது. படம் வெளியான முதல் வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ரூ 20 கோடியை இந்தப் படம் அள்ளிவிட்டது. இது தவிர, வெளிநாட்டு வசூல், தொலைக்காட்சி உரிமை, அண்டை மாநில வசூல் போன்றவை ரூ 15 கோடியைத் தாண்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடுகளம் படத்துக்குப் பிறகு தனுஷுக்கு தமிழில் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றிப் படம் இதுவே.

இறந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்ட சிறுவன் உயிருடன் இருந்த அதிசயம்


ரெயில் விபத்தில் சாவு எண்ணிக்கை 18 ஆனது இறந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்ட சிறுவன் உயிருடன் இருந்த அதிசயம்
          
நகரி
தெலுங்கானாவில் நடந்த ரெயில் விபத்தில் சாவு எண்ணிக்கை 18 ஆனது. இதில் இறந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்ட ஒரு சிறுவன் உயிருடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருவது தெரிந்தது. பெயர் குழப்பத்தால் இந்த குளறுபடி ஏற்பட்டது.
சிறுவன் உடல் அடக்கம் தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் மாசாயிபேட்டையில் பள்ளிக்கூட பஸ் மீது நாந்தேடு பயணிகள் ரெயில் மோதியதில் 14 மாணவ–மாணவிகள், டிரைவர், கிளீனர் என மொத்தம் 16 பேர் பலியானார்கள். 20 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மேலும் 2 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் கிருஷ்ணாபூரை சேர்ந்த சுவாமி கவுடு என்பவரின் மகன் தனுஷ் இறந்துவிட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் ஒரு சிறுவனின் உடலை ஒப்படைத்தனர். முகம் சிதைந்த நிலையில் இருந்த அந்த உடலை சுவாமி கவுடுவும் சோகத்துடன் பெற்றுச் சென்று கிருஷ்ணாபூரில் இறுதி சடங்குகளை நடத்தி அடக்கம் செய்தார்.
ஆஸ்பத்திரியில் இருந்தான் இந்த நிலையில் செகந்திராபாத்தில் உள்ள யசோதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த ஒரு சிறுவன் நேற்று காலை மயக்கம் தெளிந்து கண் விழித்தான். அவனிடம் டாக்டர்கள் உன் பெயர் என்ன? தந்தை பெயர், எந்த ஊர் என்ற விவரங்களை கேட்டனர். அப்போது அவன் என் பெயர் தர்ஷன் கவுடு, வீட்டில் தனுஷ் என்று செல்லமாக கூப்பிடுவார்கள். எனது தந்தை சுவாமி கவுடு, கிருஷ்ணாபூர் என்றான்.
ஆனால் ஆஸ்பத்திரி பதிவேட்டில் அவனது பெயர் தத்து என்றும் தந்தை இஸ்லாம்பூரை சேர்ந்த வீரபாபு என்றும் இருந்தது. இதனால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீரபாபுவின் மகள் புவனா விபத்தில் இறந்துவிட்டாள். அவளது உடலை அடக்கம் செய்துவிட்டு, மகன் தத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் பட்டியலில் இருந்ததால் ஆஸ்பத்திரிக்கு அருகிலேயே அவர் காத்திருந்தார்.
இன்ப அதிர்ச்சி ஆஸ்பத்திரியில் நோய் தொற்று ஏற்படும் என்பதால் பெற்றோர் யாரையும் குழந்தைகளை பார்க்க அனுமதிக்கவில்லை. சிகிச்சையில் தேறி வருபவர்களை மட்டுமே பார்க்க அனுமதித்தனர். இந்த நிலையில் ஆள் மாறிவிட்டது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் இரு சிறுவர்களின் பெற்றோரையும் (சுவாமி கவுடு, வீரபாபு) ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அப்போது தனது மகன் தனுஷ் உடலை அடக்கம் செய்துவிட்டு வந்து பார்த்த சுவாமி கவுடுவுக்கு ஆஸ்பத்திரியில் மகன் தனுஷை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவனும் தனது தந்தையை டாக்டர்கள் மற்றும் போலீசாருக்கு அடையாளம் காட்டினான்.
மந்திரி சமாதானம் அதே சமயம் மகளை இழந்தாலும், மகனாவது கிடைத்தானே என்ற ஆறுதலில் இருந்த வீரபாபுவுக்கு தனது மகன் தத்துவும் இறந்துவிட்டான் என்ற தகவல் பேரதிர்ச்சியாக இருந்தது. அதோடு தனது மகனின் உடலையும் காணமுடியாமல் அவர் அதிர்ச்சியானார்.
இதுபற்றி ஆஸ்பத்திரிக்கு வந்த தெலுங்கானா மாநில மந்திரி ஹரிஷ் ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இருவரின் பெற்றோரையும் அழைத்து சமாதானப்படுத்தினார். தனது மகன் உடலை கேட்டதால், வீரபாபுவை கிருஷ்ணாபூருக்கு அழைத்துச் சென்று சிறுவன் உடல் அடக்கம் செய்த இடத்தில் இருந்து தத்துவின் உடலை தோண்டி எடுத்து ஒப்படைத்தனர்.
அந்த குழியை வெறுமனே மூடக்கூடாது என்ற சம்பிரதாயம் காரணமாக அந்த குழியில் ஒரு சேவலை போட்டு மூடினர். பின்னர் வீரபாபு தனது மகன் தத்துவின் உடலை இஸ்லாம்பூருக்கு கொண்டு சென்று தங்கள் வழக்கப்படி இறுதி சடங்குகளை செய்தார்.
மறுபிறவி எடுத்த மகன் இதுபற்றி சுவாமி கவுடு கூறியதாவது:–
எனது மகனை பள்ளி பஸ்சில் ஏற்றிவிட்ட 10–வது நிமிடத்தில் விபத்து பற்றி தகவல் கிடைத்தது. நானும், எனது மனைவி புஷ்பாவும் சம்பவ இடத்தை பார்த்ததும் மயங்கி விழுந்துவிட்டோம். இன்று (நேற்று) எனது மகன் பிறந்த நாள். இந்த விழாவை கொண்டாட வந்த எனது மைத்துனர் விசாரித்து எனது மகனை ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக கூறினார்.
பின்னர் நாங்கள் ஆஸ்பத்திரிக்கு சென்றபோது எங்கள் மகன் இறந்துவிட்டதாக கூறினர். அந்த சிறுவனின் முகம் சிதைந்து இருந்தது. ஒரே உயரம், பருமன், வயது, சீருடை ஆகியவை காரணமாக எனக்கு சரியாக அடையாளம் காணமுடியவில்லை. எனவே உடலை பெற்றுச் சென்று அடக்கம் செய்தேன். ஆனால் பிறந்த நாளிலேயே மீண்டும் மறுபிறவி எடுத்தது போல எனது மகன் எங்களுக்கு கிடைத்துள்ளான். தத்துவின் தந்தை வீரபாபுவிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவருக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிகளில் அஞ்சலி 16 பள்ளி மாணவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.