ஜப்பானில் உள்ள சகுரஜிமா
சகுரஜிமா
என்ற தனிப்பட்ட தீவில், 1914-ல் தொடர்ச்சியான பல எரிமலை
கக்குதல்கள் மற்றும் எரிமலைக்குழம்பு வழிதல்கள் நடந்த பிறகு, அது
நிலப்பகுதியில் இணைந்தது. சகுரஜிமாவில் ஒவ்வொரு வருடமும் சிறிய
வெடித்தல்கள் நூற்றுக்கணக்கில் நடக்கிறது. இதனால் இந்த எரிமலையும்
உலகத்தில் உள்ள ஆபத்தான எரிமலைகளில் ஒன்றாக விளங்குகிறது.
கலேராஸ், கொலம்பியா
கொலம்பியாவில் உள்ள கலேராஸ் என்ற இடம் எக்குவடோர் எல்லைக்கு அருகில்
உள்ளது. இந்த எரிமலையை பற்றி ஒரு சுவாரசியம் அடங்கியுள்ளது. அதாவது இது
கடந்த 10 லட்ச வருடமாக உள்ளது. உலகத்தில் உள்ள பழமையான எரிமலைகளில் ஒன்றான
இது, 1978-ல் செயலற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 10 வருடம் கழித்து,
1988-ல், மீண்டும் இது பொங்கத் தொடங்கியது. 2000-ல் இதனை சுற்றியுள்ள
பகுதியில் தீக்குழம்புகளை மிகவும் ஆவேசமாக கக்க தொடங்கியது.
நியரன்கொங்கா மலை,
DRC
உலகத்தில் உள்ள சக்தி வாய்ந்த எரிமலைகளில் ஒன்றான இது, ஆப்ரிக்கா
கண்டத்தில் உள்ள நியரன்கொங்கா மலையில், காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ளது.
இந்த இடம் இங்குள்ள எரிமலைக்குழம்பு ஏரிகளுக்காக புகழ் பெற்றுள்ளது.
உலகத்தில் உள்ள பயப்பட வைக்கும் எரிமலைகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
மேலும் இந்த வட்டாரத்தில் வாழ்பவர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த
எரிமலை.
டால் எரிமலை,
பிலிப்பைன்ஸ்
1600-களில் டால் எரிமலையில் கிட்டத்தட்ட 30 பெருத்த வெடித்தல்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளது. இந்த வெடித்தல்களால் மகத்தான அளவிலான எரிமலைக்குழம்பு
வெளிவந்துள்ளது. இந்த எரிமலை ஒவ்வொரு முறை எரிமலைக்குழம்பு கக்கும் போது,
கிட்டத்தட்ட 6000 பேர்களின் உயிர்களை பறித்துள்ளது.
மௌனா லோ,
ஹவாய்
ஹவாயில் உள்ள மௌனா லோ என்ற இடத்தில் உள்ள எரிமலை மிகவும் ஆபத்தான எரிமலையாக
கருதப்படுகிறது. 2000-ல் உலகத்தில் உள்ள மிக ஆபத்தான எரிமலைகளை
விஞ்ஞானிகள் பட்டியலிட்ட போது, இந்த எரிமலை தான் முதல் இடத்தை பிடித்தது.
பசிபிக் பெருங்கடலின் நடுவில் ஹவாய் தீவு உருவாவதற்கு காரணமாக விளங்கிய 5
சக்தி வாய்ந்த எரிமலைகளில் இதுவும் ஒன்றாகும். கடந்த 700,000 வருடங்களாக
இந்த எரிமலையில் அடிக்கடி எரிமலை கக்குதல்கள் நடைபெற்று கொண்டே இருக்கிறது.
வெசுவியஸ் மலை,
இத்தாலி
சமீப காலமாக ஏற்பட்டுள்ள சில எரிமலை கக்குதல்கள், இத்தாலியில் உள்ள
கம்பக்நியா என்ற இடத்திலுள்ள வெசுவியஸ் மலையை மிகவும் ஆபத்தான எரிமலையாக
ஆக்கியுள்ளது. 20 வருடத்திற்கு ஒரு முறை வெசுவியஸ் மலையில் எரிமலை கக்குதல்
நடைபெறுமாம். மேலும் மிகவும் அடர்ந்த ஜனத்தொகை வாழும் இடத்திலுள்ளது இந்த
வெசுவியஸ் மலை. இதனை சுற்றி கிட்டத்தட்ட 30 லட்ச மக்கள் வசிக்கின்றனர்.
அதனால் தான் என்னவோ உலகத்தில் மிகவும் நெருக்கமான ஜனத்தொகையை கொண்ட இடமாக
விளங்குகிறது வெசுவியஸ் மலை.
No comments:
Post a Comment