Wednesday, June 25, 2014

பறக்கும் தட்டில் இருந்து எட்டி பார்க்கும் வேற்று கிரகவாசி

தைவான் நாட்டை சேர்ந்தவர் ஸ்காட் வேரிங்.  இவர் கடந்த வாரம் யூ டியூபில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.  அதில், வேற்று கிரகவாசி ஒன்று தனது தலையை உயர்த்தி சுற்றி பார்ப்பது தெரிகிறது.  வேற்று கிரகவாசிகளை குறித்த தேடலில் ஈடுபட்டு வருபவர் வேரிங்.  கூகுள் எர்த்தில் அவர் பார்த்தவற்றை குறித்து வீடியோவில் கூறும்போது, நேற்று இரவு நான் சற்று கவனமுடன் உற்று பார்த்தேன்.  அது வழக்கமான வேற்று கிரகவாசி போன்று இல்லை.  உருண்டையான தலை கொண்ட ஒரு பொருள் இருந்தது.

உயரமான பகுதியில் இருந்து அது வெளியே நீட்டி கொண்டு இருந்தது.  அது பார்ப்பதற்கு தலை போன்று எனக்கு தோன்றியது.  அது பயணம் செய்த பறக்கும் தட்டின் உள்ளே இருந்து தனது தலையை உயர்த்துவது போன்று தெரிந்தது.  அந்த வடிவம் பெரிய மண்டையோடு போன்று இருந்தது.  ஒரு பெரிய தலை சிறிய கன்ன பகுதி ஆகியவற்றை அது கொண்டு இருந்தது என்று கூறியுள்ள அவர் அதனை பார்ப்பதற்கான வழிகாட்டி முறைகளையும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கூகுள் எர்த்தில் சென்று டிரவுட் கிரீக், மொன்டானா என்பதை கண்டுபிடிக்கவும்.

அதற்கு அடுத்து, நெடுஞ்சாலை எண் 200ல் ஆறு ஒன்றின் மீது உள்ள பாலத்தை பார்க்கலாம்.  ஆரஞ்சு நிற மனிதனை இழுத்து பாலத்திற்கு மேல் கொண்டு வாருங்கள்.

வானில் பறக்கும் தட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.  அந்த பக்கத்தை மேல்நோக்கி நகர்த்தினால் அங்கு சூரியன் இருப்பதையும் பார்க்கலாம்.

 
 

பறக்கும் தட்டை நன்றாக பார்க்க வேண்டுமானால் சற்று முன்னோக்கி (ஜூம் செய்து) செல்லவும்.  அங்கு என்ன தெரிகிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்?  பறக்கும் தட்டு, நிலா அல்லது ஒளிரும் பகுதி மட்டுமா?

ஒரு உடைந்த பானை போன்று அந்த புகைப்படத்தை பார்க்கவும்.  மேல் பகுதியில் இருந்து தனது தலையை உயர்த்தி வேற்று கிரகவாசி பார்ப்பதை உங்களால் பார்க்க முடிகிறதா?

நீங்கள் பறக்கும் தட்டு இருப்பதை பார்க்கலாம் என்று கூறும் வேரிங், அதில் உள்ள வேற்று கிரகவாசியையும் கூகுள் எர்த்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் 20 வெவ்வேறு பகுதிகளில் காணலாம் என தெரிவித்துள்ளார்.  இது குறித்து நாங்கள் சோதனை செய்யவோ மற்றும் அதற்கான முயற்சியில் இறங்கவோ இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Wednesday, June 18, 2014

உலகின் மிகப்பெரிய யானை தந்தத்திற்காக கொலை

நைரோபி: தரை வரை நீண்ட தந்தங்களை கொண்ட, உலகின் மிகப் பெரிய யானையாக கருதப்பட்ட, ஆப்பிரிக்காவின், 'சதாவோ' அதன் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டது. கடந்த, 18 மாதங்களாக, அந்த யானையை தேடி வந்த கென்ய வன அதிகாரிகள், விஷ அம்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த யானை இருப்பதை கண்டுபிடித்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அங்கு வந்த, கால்நடை மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில், யானை உடல் நலம் தேறியது. இந்நிலையில், கடந்த மாதம், யானை ஒன்று இறந்து கிடப்பதாக, வனவிலங்கு அறக்கட்டளை அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து, அங்கு சென்ற வனவிலங்கு அதிகாரிகள், இறந்து கிடந்தது சதாவோ என்பதை உறுதி செய்தனர். யானையின் தந்தங்கள் வெட்டியெடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Monday, June 9, 2014

மாயமான மலேசிய விமானம்: துப்பு தருவோருக்கு பரிசு

கோலாலம்பூர் : காணாமல் போன மலேசிய விமானம் குறித்து தகவல் தருவோருக்கு, 30 கோடி ரூபாய் பரிசளிப்பதாக, அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள்
அறிவித்துள்ளனர். ஐந்து இந்தியர்கள் உட்பட, 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, கடந்த மார்ச் 8ல், சீன தலைநகர் பிஜிங் செல்லும் வழியில், மலேசிய விமானம் நடுவானில் காணாமல் போய்விட்டது.இந்த விமானம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டதையடுத்து, அப்பகுதியில் தேடும் பணியில், பல நாடுகளின் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். தற்போது வரை, விமானத்தின் நிலை என்ன என்பதை, மலேசிய அரசால் அறிய இயலவில்லை. விமானம் காணாமல் போய் மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், 'விமானம் குறித்த சரியான தகவல்கள் அளிப்பவர்களுக்கு, 30 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்' என, பயணிகளின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால், விமானம் குறித்த தகவல் கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.