Wednesday, June 18, 2014

உலகின் மிகப்பெரிய யானை தந்தத்திற்காக கொலை

நைரோபி: தரை வரை நீண்ட தந்தங்களை கொண்ட, உலகின் மிகப் பெரிய யானையாக கருதப்பட்ட, ஆப்பிரிக்காவின், 'சதாவோ' அதன் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டது. கடந்த, 18 மாதங்களாக, அந்த யானையை தேடி வந்த கென்ய வன அதிகாரிகள், விஷ அம்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த யானை இருப்பதை கண்டுபிடித்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அங்கு வந்த, கால்நடை மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில், யானை உடல் நலம் தேறியது. இந்நிலையில், கடந்த மாதம், யானை ஒன்று இறந்து கிடப்பதாக, வனவிலங்கு அறக்கட்டளை அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து, அங்கு சென்ற வனவிலங்கு அதிகாரிகள், இறந்து கிடந்தது சதாவோ என்பதை உறுதி செய்தனர். யானையின் தந்தங்கள் வெட்டியெடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment