கோலாலம்பூர் : காணாமல்
போன மலேசிய விமானம் குறித்து தகவல் தருவோருக்கு, 30 கோடி ரூபாய்
பரிசளிப்பதாக, அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள்
அறிவித்துள்ளனர். ஐந்து இந்தியர்கள் உட்பட, 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, கடந்த மார்ச் 8ல், சீன தலைநகர் பிஜிங் செல்லும் வழியில், மலேசிய விமானம் நடுவானில் காணாமல் போய்விட்டது.இந்த விமானம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டதையடுத்து, அப்பகுதியில் தேடும் பணியில், பல நாடுகளின் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். தற்போது வரை, விமானத்தின் நிலை என்ன என்பதை, மலேசிய அரசால் அறிய இயலவில்லை. விமானம் காணாமல் போய் மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், 'விமானம் குறித்த சரியான தகவல்கள் அளிப்பவர்களுக்கு, 30 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்' என, பயணிகளின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால், விமானம் குறித்த தகவல் கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

No comments:
Post a Comment