Thursday, March 27, 2014

நடுவானில் தீப்பிடித்த மலேசிய விமானம் பாதுகாப்பாக திரும்பியது

கோலாலம்பூர்,

மலேசிய விமான நிறுவனத்தின் உள்நாட்டு போக்குவரத்து விமானம் ஒன்று நடுவானில் இன்று தீப்பிடித்ததையடுத்து உடனடியாக தரையிறக்கப்பட்டது. 
மலிந்தோ ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை கோலாலம்பூர் அருகே உள்ள சுபாங் விமான நிலையத்தில் இருந்து டெரங்கானு விமான நிலையத்திற்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் ஒரு என்ஜினில் தீப்பிடித்தது. 
இதனால் அதிர்ச்சியடைந்த பைலட், விமானத்தை உடனடியாக திருப்பினார். பின்னர் சுபாங் விமான நிலையத்திடம் அனுமதி பெற்று பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார். இதனால் பயணிகள் காயமின்றி தப்பினர். அவர்கள் அனைவரும் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். சரியான நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. 
என்ஜின் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. 239 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போய் 18 நாட்களாகியும் அதன் பாகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இன்று மற்றொரு விமானம் விபத்தில் இருந்து தப்பியிருக்கிறது.

ஹிட்லரின் தற்கொலை பொய்

ஹிட்லரின் தற்கொலை பொய்.
 95 வயது வரை தலைமறைவாக வாழ்ந்தார் : சர்ச்சை ஏற்படுத்திய புத்தகம் கடந்த 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் தோல்வி அடைந்தவுடன் ஜெர்மனியின்கொடுங்கோலர் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதாகத்தான் வரலாறு இதுவரை கூறிவந்துள்ளது. ஆனால் தற்போது Simoni Renee Guerreiro Dias என்ற எழுத்தாளர் எழுதி தற்போது வெளிவந்துள்ள ஒரு புத்தகத்தில் ஹிட்லர் தற்கொலை நாடகம் நடத்திவிட்டு தப்பியோடி விட்டதாகவும், அதன்பின்னர் அவர் கருப்பின காதலி ஒருவருடன் பல வருடங்கள் வாழ்ந்து தனது 95வது வயதில் 1984ல் தான் மரணம் அடைந்தார் என்று கூறியுள்ளார். இதனால் உலகம் முழுவதிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

      

       1945ல் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும் தற்கொலை நாடகம் நடத்திய ஹிட்லர், சுரங்கப்பாதை வழியாக தப்பியோடி அர்ஜெண்டினா, பராகுவே நாடுகளுக்கு சென்று பின்னர் பிரேசில் நாட்டில் நீண்ட காலம் தலைமறைவு வாழ்ந்ததாக அந்த எழுத்தாளர் பல படங்களுடன் ஆதாரபூர்வமாக எழுதியுள்ளார். ஹிட்லர் தனது தலைமுறை வாழ்க்கையில் மீசையை எடுத்துவிட்டு, கருப்பின காதலி ஒருவருடன் வாழ்ந்து வந்ததாகவும், அவர் ஆதாரத்துடன் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். ஹிட்லர் பயன்படுத்திய உடைகள் மற்றும் அவருடைய புகைப்படங்களும் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த புத்தகத்தால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

Tuesday, March 11, 2014

மாயமான மலேசிய விமானத்தின் மர்மம் நீடிப்பு: நான்காவது நாளாக தொடர்கிறது தேடுதல் வேட்டை

கோலாலம்பூர்: மலேசியாவிலிருந்து, 239 பேருடன், சீனாவுக்கு சென்ற பயணிகள் விமானம் மாயமாகி, மூன்று நாட்களாகியும், அதன் கதி என்ன என்பது மர்மமாக உள்ளது.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், கோலாலம்பூரிலிருந்து, 7ம் தேதி இரவு, இந்திய நேரப்படி, 11:10 மணிக்கு, சீன தலைநகர், பீஜிங் நகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில், 227 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் இருந்தனர். புறப்பட்ட, இரண்டு மணி நேரத்திற்கு பின், விமானம், கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், விமானத்தின் நிலை குறித்து, தீவிரமாக ஆராய்ந்தனர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின், வியட்னாம் நாட்டின், பூ குயாக் தீவுக்கு அருகே, தென் சீனக் கடலில், எண்ணெய் படலங்கள் தென்பட்டன. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், கடலில் விழுந்ததால் இந்த எண்ணெய் படலம் ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்பட்டது. விமானத்தில், 152 சீனர்களும், மலேசிய நாட்டவர், 38 பேரும், இந்தியர்கள், ஐந்து பேரும், இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள், ஆறு பேரும், பிரான்ஸ் நாட்டினர், மூன்று பேரும், அமெரிக்கர்கள், நான்கு பேரும், நியூசிலாந்தை சேர்ந்த, இருவரும், உக்ரைன் நாட்டவர், இரண்டு பேரும், கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் இருவரும், ரஷ்யா, தைவான், நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா, ஒருவரும் பயணித்துள்ளனர். இந்தியர்கள் ஐந்து பேரில், ஒருவர், சென்னையைச் சேர்ந்த, சந்திரிகா சர்மா. மங்கோலியா நாட்டில் நடக்கும் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்க, சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவன செயலர், சந்திரிகா சர்மா இந்த விமானத்தில் பயணித்து உள்ளார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர், ரங்கராஜன் குமாரமங்கலத்தின் பேரன் முக்தேஷ், 47. இவருடைய மனைவி ஜானா, 37. கனடா நாட்டில் வசித்த இவர்கள், வர்த்தக விஷயமாக இந்த விமானத்தில், சீனாவுக்கு பயணமாகியுள்ளனர்.


மர்மம் நீடிப்பு: நான்கு நாட்களாகியும், விமானம் விபத்துக்குள்ளான இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானத்தைக் கண்டறியும் முயற்சியில், அமெரிக்க புலனாய்வு நிபுணர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மலேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள், மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் பாஸ்போர்ட் விவரங்களை ஆராய்ந்தனர்.
இதற்கிடையே, இவ்விமானத்தில் பயணித்ததாக கருதப்பட்ட இத்தாலி மற்றும் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த ஊரில் இருப்பதாக தெரியப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது, இவர்கள் இருவரும், தங்கள் பாஸ்போர்ட்டை, தாய்லாந்தில் தவறவிட்டவர்கள். எனவே, இந்த பாஸ்போர்ட்டை திருடியவர்கள், மலேசிய விமானத்தில் பயணித்துள்ளது, தற்போது தெரிய வந்துள்ளது. இதே போல, சீனாவை சேர்ந்த இருவரும், போலி பெயரில் டிக்கெட் எடுத்து பயணித்துள்ளனர். எனவே, இந்த நான்கு பேரும், பயங்கரவாதிகளாக இருக்கலாம். இவர்கள் விமானத்தைக் கடத்தி, கடலுக்குள் மூழ்கச் செய்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது

Monday, March 10, 2014

இந்திய திருநாட்டின் பிரதமர்கள் ஒரு பார்வை

எண்
பெயர்
தொடக்கம்
முடிவு

1.

ஸ்ரீ ஜவகர்லால் நேரு

15-08-1947

27-05-1964

2.

ஸ்ரீ குல்ஜரிலால் நந்தா

27-05-1964

09-06-1964

3.

ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி

09-06-1964

11-01-1966

4.

ஸ்ரீ குல்ஜரிலால் நந்தா

11-01-1966

24-01-1966

5.

இந்திரா காந்தி

24-01-1966

24-05-1977

6.

ஸ்ரீ மொரார்ஜி தேசாய்

24-03-1977

28-07-1979

7.

ஸ்ரீ சரண் சிங்

28-07-1979

14-01-1980

8.

ஸ்ரீ இந்திரா காந்தி

14-01-1980

31-10-1984

9.

ஸ்ரீ ராஜீவ் காந்தி

31-10-1984

02-12-1989

10.

ஸ்ரீ வி. பி. சிங்

02-12-1989

10-11-1990

11.

ஸ்ரீ சந்திரசேகர்

10-11-1990

21-06-1991

12.

ஸ்ரீ பி. வி. நரசிம்ம ராவ்

21-06-1991

16-05-1996

13.

ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய்

16-05-1996

01-06-1996

14.

ஸ்ரீ தேவ கௌடா

01-06-1996

21-05-1997

15.

ஸ்ரீ ஐ. கே. குஜரால்

21-05-1997

19-03-1998

16.

ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய்

19-03-1998

22-05-2004

17.

ஸ்ரீ மன்மோகன் சிங்

22-05-2004

Till Date

Wednesday, March 5, 2014

காதல் முறிவுக்கு பின் இணைந்து நடிக்கும் சிம்பு ஹன்சிகா


சென்னை,
நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் வாலு, வேட்டை மன்னன்  படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில்தான் இருவருக்கும்  நெருக்கம் ஏற்பட்டு இருவருமே  காதலை    பகீரங்கமாக அறிவித்தார்கள். விரைவில் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் சிம்பு ‘ஹன்சிகாவுடனான என்னுடைய உறவு முறிந்து விட்டது. இந்த உறவில் நான் போதும் என்ற அளவுக்கு அனுபவப்பட்டு விட்டேன். நன்றாக சிந்தித்த பிறகே இந்த முடிவுக்கு வந்து உள்ளேன். இனிமேல் ஹன்சிகாவுக்கும், எனக்கும் எதுவும் இல்லை. என  அறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார்.
பாண்டிராஜ் இயக்கும் ஒரு  படத்தில்  படத்தில்  சிம்புவும் நயன்தாராவும் இணைந்து  நடிக்கின்றனர்.இதனால் அவர்களது நட்பு மீண்டும் துளிர் விட்டதாகவும் இது ஹன்சிகாவுக்கு பிடிக்க வில்லை. இதனால் தகராறு ஏற்பட்டு  பிரிந்துள் ளார்கள்.என்றும் கூறபட்டது.
காதல் முறிவுக்கு பின் சிம்புவும்  ஹன்சிகாவும்  மீண்டும் இணைந்து நடிக் கிறார்கள்.வாலு படத்தில் இரண்டு பாடல் காட்சிகள்  பாக்கி உள்ளன.   இதை விரைவில் படமாக்க  திட்டமிட்டு உள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறுகிறது:


புதுடெல்லி
தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 24 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
தற்போதைய 15–வது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற ஜூன் 1–ந்தேதியுடன் முடிவடைகிறது.எனவே மே 31–ந்தேதிக்குள் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட வேண்டும். இதனால் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக உள்ளது.
இந்தியா முழுவதும் 543 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தல் பணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊழியர்களை அழைத்துச்செல்வது போன்ற பிரச்சினைகளை கருத்தில் கொண்டு எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது என்பது பற்றி தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஆலோசித்து வந்தனர்.
இதுதொடர்பான பணிகள் முடிவடைந்து விட்டதால், பாராளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கபப்ட்டது. டெல்லி விஞ்ஞான பவனில் இன்று நடைபெறும் நிருபர்கள் சந்திப்பில் பாராளுமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் தேர்தல் தேதியை அறிவித்தார். அப்போது தேர்தல் கமிஷனர்கள் எச்.எஸ்.பிரம்மா, எஸ்.என்.ஏ.ஜைதி ஆகியோர் உடன் இருந்தார்கள்.
அப்போது அவர் கூறியதாவது:-ஆந்திர, சிக்கிம் ஒடிசா மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. மக்களவை தேர்தலுக்காக சுமார் 9,30 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். மொத்தமுள்ள 81.4 கோடி வாக்களர்களில் 10 சதவீத வாக்காளர்கள் புதிய வாக்காளர்கள்.1952 முதல் தேர்தலில் 17.2 கோடி பேர் வக்களித்தனர்.நோட்டோ பயன்படுத்தும் முறை இந்த தேர்தலில் முதல் முறையாகஅறிமுகமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் நடத்தைகள் உன்னிப்பாக கவனிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 9 ஆம் தேதி நாடுமுழுவதும் சிறப்பு முகாம் அமைக்கப்பட உள்ளது. என்றார்.
மேலும்  மக்களவை தேர்தல் 9 கட்டமாக நாடுமுழுவதும் நடத்தப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக  ஏப்ரல் 24 ஆம் தேதி  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல், மே 16 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார். இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன.
ராளுமன்றத்துக்கு மொத்தம் 9 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தப்படும். ஏப்ரல் 7-ந்தேதி தேர்தல் தொடங்கும். ஏப்ரல் 9-ந்தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 10-ந்தேதி தேதி மூன்றாம் கட்ட ஓட்டுப்பதிவும், ஏப்ரல் 12-ந்தேதி நான்காம் கட்ட தேர்தலும், ஏப்ரல் 17-ந்தேதி ஐந்தாம் கட்ட தேர்தலும் நடைபெறும்.ஏப்ரல் 24-ந்தேதி ஆறாம் கட்ட தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 30-ந்தேதி ஏழாம் கட்ட ஓட்டுப்பதிவும், மே மாதம் 7-ந்தேதி எட்டாம் கட்ட ஓட்டுப்பதிவும், மே 12-ந்தேதி ஒன்பதாம் கட்ட ஓட்டுப்அப்திவும் நடைபெறும்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 24-ந்தேதி (வியாழக்கிழமை) தேர்தல் நடத்தப்படுகிறது.  தமிழ்நாட்டில் மார்ச் 29 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல்  தொடங்குகிறது.  வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 5 ஆம் தேதி கடைசி நாள்பா. வேட்பு மனு மீதான பரீசிலனை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறும். அதேபோல், மே 16 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Monday, March 3, 2014

2014ம் ஆண்டிற்கான இரண்டாவது சூப்பர் மூன் வரும் வெள்ளிக்கிழமை விண்வெளியில் காணலாம்

2014ம் ஆண்டிற்கான இரண்டாவது சூப்பர் மூன் வரும் வெள்ளிக்கிழமை விண்வெளியில் காணலாம்


2014ம் ஆண்டின் இரண்டாவது சூப்பர் மூன் வரும் வெள்ளிக்கிழமை அன்று விண்வெளியில் காணலாம் என்று விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதன் முதல் சூப்பர் மூன் இந்த மாதம் 1ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதேபோன்று ஒரே மாதத்தில் இரண்டு முறை தோன்றும் சூப்பர் மூன் இனி வரும் 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று இரண்டாவது முறை தோன்றும் சூப்பர் மூன் மாலை 3.30 மணிக்கு காணலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மற்ற மூன்று சூப்பர் மூன்கள் ஜூலை 12, ஆகஸ்ட் 10 மற்றும் செப்டம்பர் 9ஆம் தேதியன்று காணப்படும். ஒன்று ஆகஸ்ட் மாதம் பூமிக்கு மிக அருகில் இருக்கும் என்றும் கூறியுள்ளனர். அந்த சமயத்தில் நிலவின் அளவு 14% பெரியதாகவும், 30% அதிக பிரகாசமாகவும் காணப்படும் என்று விண்வெளி பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் சி.பி.தேவ்கன் குறிப்பிட்டுள்ளார். பூமியைச் சுற்றிவரும் சூரியன், சந்திரன் ஆகியவை இந்த ஆண்டு ஐந்து முறை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் வாய்ப்பு வருகின்றது.

அப்போது சந்திரன் சூரியனைவிட பூமியின் அருகில் வருவதால் அதனுடைய பிரகாசம் அதிகமாகவும், அளவு பெரியதாகவும் தெரியும் வாய்ப்பு உள்ளது. அளவில் பெரியதாகத் தோன்றும் இந்த சந்திரனே சுமார் 30 வருடங்களுக்கு முன் கடந்த 1979ஆம் ஆண்டில் சூப்பர் மூன் என்று ரிச்சர்டு நொள்ளே என்ற வானவியல் ஆராய்ச்சியாளரால் பெயரிடப்பட்டது.

கூட்டணியில் சேருவதற்கு தேமுதிக, பாமகவுக்கு பாஜ 2 நாட்கள் கெடு

சென்னை: கூட்டணியில் சேருவது குறித்து முடிவு தெரிவிக்க தேமுதிக, பாமக கட்சிகளுக்கு பாஜ 2 நாட்கள் கெடு விதித்துள்ளது. இதற்கிடையே, சிங்கப்பூரில் இருந்து விஜயகாந்த் இன்று இரவு சென்னை திரும்புகிறார்.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிகள் இன்னும் உறுதியாகவில்லை. அதிமுக அணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், தொகுதி பங்கீட்டில் சிக்கல் நிலவுகிறது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. திமுகவில் வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் முடிகிறது. நாளை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. பாஜ அணியில் மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி கட்சிகள் இடம்பெற்றுள்ளன.


தேமுதிக, பாமக கட்சிகளுடன் பாஜ பேசி வருகிறது. பாமக 14 தொகுதிகளையும், தேமுதிக 20 தொகுதிகளையும் கேட்டதால் இழுபறி ஏற்பட்டது. இரு கட்சிகளும் தொகுதிகளை குறைக்க முன் வந்தாலும், எந்தெந்த தொகுதிகள் என்பதில் சிக்கல் நீடிக்கிறது.கடைசியாக, தேமுதிகவுக்கு 12, பாமகவுக்கு 8 சீட் வழங்க பாஜ முடிவு செய்தது. இரு கட்சிகளும் இதை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், குறிப்பிட்ட சில தொகுதிகளை இரு கட்சிகளுமே கேட்கின்றன. இதனால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிங்கப்பூர் சென்ற விஜயகாந்த் இன்று இரவு 10.20 மணிக்கு சென்னை திரும்புகிறார். நாளை அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு, கூட்டணி குறித்து அறிவிப்பார் என்று தெரிகிறது.

தேமுதிகவை எப்படியாவது கூட்டணியில் சேர்க்க வேண்டுமென பாஜ விரும்புகிறது. அதனால், அவர்கள் கேட்கும் தொகுதிகளை வழங்க பாஜ முன்வரலாம். அப்படி தேமுதிக கேட்கும் தொகுதிகளை வழங்கினால், பாமக வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் தேமுதிக, பாமக கட்சிகள் 2 நாட்களில் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டுமென பாஜ கெடு விதித்துள்ளது. இதனால், பாஜ கூட்டணி குறித்து நாளை இறுதி முடிவு தெரிய வரலாம். பாஜ அணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிகளான கொங்குநாடு  மக்கள் தேசிய கட்சி, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட சிறிய கட்சி தலைவர்களை இன்று சென்னையில் இருக்கும்படி பாஜ கேட்டுக்கொண்டுள்ளது. அவர்களுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேசப்படும் என்று கூறப்படுகிறது.