சென்னை: கூட்டணியில் சேருவது குறித்து முடிவு தெரிவிக்க தேமுதிக, பாமக
கட்சிகளுக்கு பாஜ 2 நாட்கள் கெடு விதித்துள்ளது. இதற்கிடையே, சிங்கப்பூரில்
இருந்து விஜயகாந்த் இன்று இரவு சென்னை திரும்புகிறார்.தமிழகத்தில்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிகள் இன்னும் உறுதியாகவில்லை. அதிமுக அணியில்
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், தொகுதி
பங்கீட்டில் சிக்கல் நிலவுகிறது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைள்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம்
கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. திமுகவில் வேட்பாளர் நேர்காணல் இன்றுடன்
முடிகிறது. நாளை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. பாஜ
அணியில் மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி
கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தேமுதிக, பாமக கட்சிகளுடன் பாஜ பேசி வருகிறது. பாமக 14 தொகுதிகளையும், தேமுதிக 20 தொகுதிகளையும் கேட்டதால் இழுபறி ஏற்பட்டது. இரு கட்சிகளும் தொகுதிகளை குறைக்க முன் வந்தாலும், எந்தெந்த தொகுதிகள் என்பதில் சிக்கல் நீடிக்கிறது.கடைசியாக, தேமுதிகவுக்கு 12, பாமகவுக்கு 8 சீட் வழங்க பாஜ முடிவு செய்தது. இரு கட்சிகளும் இதை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், குறிப்பிட்ட சில தொகுதிகளை இரு கட்சிகளுமே கேட்கின்றன. இதனால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிங்கப்பூர் சென்ற விஜயகாந்த் இன்று இரவு 10.20 மணிக்கு சென்னை திரும்புகிறார். நாளை அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு, கூட்டணி குறித்து அறிவிப்பார் என்று தெரிகிறது.
தேமுதிகவை எப்படியாவது கூட்டணியில் சேர்க்க வேண்டுமென பாஜ விரும்புகிறது. அதனால், அவர்கள் கேட்கும் தொகுதிகளை வழங்க பாஜ முன்வரலாம். அப்படி தேமுதிக கேட்கும் தொகுதிகளை வழங்கினால், பாமக வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் தேமுதிக, பாமக கட்சிகள் 2 நாட்களில் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டுமென பாஜ கெடு விதித்துள்ளது. இதனால், பாஜ கூட்டணி குறித்து நாளை இறுதி முடிவு தெரிய வரலாம். பாஜ அணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிகளான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட சிறிய கட்சி தலைவர்களை இன்று சென்னையில் இருக்கும்படி பாஜ கேட்டுக்கொண்டுள்ளது. அவர்களுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேசப்படும் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment