Wednesday, April 23, 2014

பழநி மலைக்கோயில் படிக்கடைகள் அகற்றம்!

பழநி மலைக்கோயில் படிக்கடைகள் அகற்றம்!



Temple images
பழநி: பழநி மலைக்கோயில் படிக்கட்டு, யானைப்பாதையில், பக்தர்களுக்கு இடையூறாக இருந்த கடைகளை, எதிர்ப்பை சமாளித்து கோயில் நிர்வாகம் அகற்றியது. பழநி மலைக்கோயில் நடைபாதையை ஆக்கிர மித்து, கடைக்காரர்கள் பக்தர்களுக்கு இடையூறு செய்தனர். மேலும், கடை ஒன்றில் அசைவ சாப்பாடு, மதுபாட்டில் இருந்தது சில மாதங்களுக்கு முன் சர்ச்சையை கிளப்பியது. இதனால், படிப்பாதை, யானைப்பாதையில் அனுமதிக்கப்பட்ட 13 கடைகளையும் அகற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதை எதிர்த்த வழக்கில் ஏப்., 21 க்குள் உரிமையாளர்களே கடையை காலிசெய்யவேண்டும். கோயில் நிர்வாகம், கடைகளை அகற்றி ஏப்., 23 க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. நேற்று, இணை ஆணையர் (பொ) ராஜமாணிக்கம், ஆர்.டி.ஓ., சுந்தர் ராஜ், தாசில்தார் வரதராஜன் முன்னிலையில் கோயில் பாதுகாவலர்கள், பணியாளர்கள், போலீசார் உதவியுடன், கடைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைக்காரர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் விரட்டும்போது, இரு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின், கடைகள் முழுமையாக அகற்றப்பட்டன.

Tuesday, April 15, 2014

'ரோபோ' நீர்மூழ்கி கப்பலின் செயல்பாடு தோல்வி

பெர்த்: காணாமல் போன மலேசிய விமானத்தை, தேடுவதற்காக, பயன்படுத்தப்பட்ட, 'ரோபோ' நீர்மூழ்கி கப்பலின் செயல்பாடு தோல்வியடைந்துள்ளது.


மலேசியாவின், கோலாலம்பூர் நகரிலிருந்து, கடந்த மாதம், 8ம் தேதி, சீனாவுக்கு புறப்பட்ட விமானம், மாயமானது. 239 பேருடன் சென்ற இந்த விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம், என, சந்தேகிக்கப்படுகிறது. இவ்விமானத்தில், சென்னை பெண் உட்பட, ஐந்து இந்தியர்களும், கனடா நாட்டு தமிழர் ஒருவரும் பயணித்துள்ளனர். மலேசிய விமானத்தை தேடும் குழுவின் தலைவரான, ஆஸ்திரேலிய மாஜி கடற்படை தளபதி, அங்கஸ் ஹூஸ்டன் கூறியதாவது: விமானத்தின், கருப்பு பெட்டியில் உள்ள பேட்டரி காலாவதியாகி விட்டதால், அதிலிருந்து வரும் சிக்னல் மறைந்து விட்டது. இதனால், அமெரிக்காவின், 'ப்ளுபின்-21' என்ற, 'ரோபோ' நீர்மூழ்கி கப்பலை ஆழ்கடலில் செலுத்தி, விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ரோபோ நீர்மூழ்கி கப்பல், 4.5 கி.மீ., ஆழத்துக்கு மேல் செல்லும் திறன் அற்றதாக உள்ளது. ஆறு மணி நேர பயன்பாட்டுக்கு பிறகு, இந்த ரோபோ நீர்மூழ்கி கப்பலை வாபஸ் பெற்று விட்டோம். தற்போது, 62 ஆயிரம் சதுர கி.மீ., கடற்பரப்பில், விமானத்தை தேடி வருகிறோம். பல நாடுகளின், 11 கப்பல்களும், 11 விமானங்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. மாயமான விமானத்துக்கான தடயம் கிடைக்க, இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகலாம். இவ்வாறு ஹூஸ்டன் கூறியுள்ளார்.

கரன்சி நிலவரம்

அமெரிக்கா(டாலர்) 60.265 ஐரோப்பா(யூரோ) 83.275
பிரிட்டன்(பவுண்டு) 100.797 ஆஸ்திரேலியா(டாலர்) 56.445
சிங்கப்பூர்(டாலர்) 48.143 ஹாங்காங்(டாலர்) 7.772
ஜப்பான்(யென்) 0.59 மலேசியா(ரிங்கட்) 18.577
பக்ரைன்(தினார்) 159.829 ஜோர்டான்(தினார்) 85.06
குவைத்(தினார்) 214.161 ஓமன்(ரியால்) 156.553
கத்தார்(ரியால்) 16.552 சவுதி(ரியால்) 16.069
தாய்லாந்து(பாத்) 1.865 ஐக்கிய அரபு எமிரேடு(திர்காம்) 16.408

Wednesday, April 9, 2014

சேலம் புதிய கலெக்டராக ஹனிஸ்ஷாப்ரா பொறுப்பேற்பு

சேலம் : சேலம் கலெக்டராக இருந்த மகரபூஷணம் மீது பல் வேறு புகார்கள் எழுந் ததை தொடர்ந்து தேர்தல் ஆணை யம் அவரை இடமாற்றம் செய்து உத்தரவிட் டது. இதையடுத்து புதிய கலெக்டராக ஹனிஷ் ஷாப்ரா நியமிக்கப்பட் டார். நேற்று அவர் சேலம் மாவட்டத்தின் புதிய கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொறுப்பேற்றுக்கொண்ட ஹனிஸ்ஷாப்ராவிற்கு வயது 34, இவர் டெல்லியை சேர்ந்தவர். இவர் இதற்கு முன் காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனராகவும், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, April 5, 2014

"ஜெ' ஜாதகத்தில் என்ன உள்ளது ?

தூத்துக்குடி: "பாரதத்தை ஆளும் வாய்ப்பு முதல்வர் 'ஜெ' ஜாதகத்தில் உள்ளது,'' என மதுரை ஆதீனம் பேசினார். தூத்துக்குடி அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜநட்டர்ஜியை ஆதரித்து திருச்செந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மதுரை ஆதீனம் பேசியதாவது: நாட்டில் உள்ள கொள்ளையர்கள் கூட்டத்தை விரட்ட 2014 லோக்சபா தேர்தல் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த காமராஜர், மூப்பனார் போன்றவர்களுக்கு பிரதமராகும் வாய்ப்பு வந்தபோது அதனை அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை. "ஜெ' பிரதமராக நல்ல தருணம் ஏற்பட்டுள்ளது. அவரது ஜாதகத்தில் பிரதமராகவும் வாய்ப்புள்ளது. "ஜெ' பிரதமரானால் இந்தியா வல்லரசாக மாறும். இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது தமிழக அரசு தான், அவர் மிக துணிச்சலான பெண்மணி. நாடு தீவரவாதம்,பயங்கரவாதம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது. இந்திய நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது. நமது தொகுதியிலும் "ஜெ' போட்டியிடுகிறார், என நினைத்து அ.தி.மு.க., கட்சிக்கு ஓட்டு போட வேண்டும், என அவர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ எம்,எல்,ஏ., உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.