Saturday, April 5, 2014

"ஜெ' ஜாதகத்தில் என்ன உள்ளது ?

தூத்துக்குடி: "பாரதத்தை ஆளும் வாய்ப்பு முதல்வர் 'ஜெ' ஜாதகத்தில் உள்ளது,'' என மதுரை ஆதீனம் பேசினார். தூத்துக்குடி அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜநட்டர்ஜியை ஆதரித்து திருச்செந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மதுரை ஆதீனம் பேசியதாவது: நாட்டில் உள்ள கொள்ளையர்கள் கூட்டத்தை விரட்ட 2014 லோக்சபா தேர்தல் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த காமராஜர், மூப்பனார் போன்றவர்களுக்கு பிரதமராகும் வாய்ப்பு வந்தபோது அதனை அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை. "ஜெ' பிரதமராக நல்ல தருணம் ஏற்பட்டுள்ளது. அவரது ஜாதகத்தில் பிரதமராகவும் வாய்ப்புள்ளது. "ஜெ' பிரதமரானால் இந்தியா வல்லரசாக மாறும். இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது தமிழக அரசு தான், அவர் மிக துணிச்சலான பெண்மணி. நாடு தீவரவாதம்,பயங்கரவாதம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது. இந்திய நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது. நமது தொகுதியிலும் "ஜெ' போட்டியிடுகிறார், என நினைத்து அ.தி.மு.க., கட்சிக்கு ஓட்டு போட வேண்டும், என அவர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ எம்,எல்,ஏ., உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment