நைஜர்:நைஜீரியாவின் மத்திய பகுதியான ஜோஸ் நகரில் அடுத்தடுத்து இரண்டு
கார் குண்டுகள் வெடித்ததில் 118 பேர் உடல் சிதறி பலியானார்கள்.நியூ அபுஜா
மார்க்கெட் பகுதியில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு முதல் தாக்குதல்
நடந்தது. பின்னர் மீண்டும் அரைமணி நேரத்தில் இரண்டாவது தாக்குதல்
நடந்தது.நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்என அஞ்சப்படுகிறது.
No comments:
Post a Comment