மூத்த மகனுக்கு காந்தி எழுதிய கடிதம் ஏலத்துக்கு வருகிறது
லண்டன்,
மகாத்மா காந்தி தனது மூத்த மகன் ஹரிலாலுக்கு எழுதிய கடிதம் அடுத்த வாரம் ஏலத்திற்கு வருகிறது. தனது மகன் விவகாரத்தில் மகாத்மா காந்தி வருத்தத்தில் எழுதிய மூன்று கடிதங்கள் ஏலத்திற்கு வருகிறது. காந்தி 1935ம் ஆண்டு எழுதிய இந்த கடிதங்களை ஏலம் விடும் ஸ்ரோப்ஷைரில் உள்ள பிரபல நிறுவனம், கடிதங்கள் 50,000 பவுண்ட் முதல் 60 ஆயிரம் பவுண்ட் வரையில் ஏலம் போகும் என்று நம்புகிறது.
காந்தியின் மூத்த மகன் ஹரிலால். ஹரிலால் மதுவுக்கு அடிமையாகி பல்வேறு தவறுகளை செய்ததால் தந்தையின் அதிருப்தியை சம்பாதித்தவர். பின்னர் தனது மகனே இல்லை என்று காந்தி அவரை தள்ளி வைத்ததாகவும், அதிகாரப்பூர்வ விடுதலை பத்திரத்தை அளித்ததாகவும் கூறப்படுகிறது.
காந்தியின் மூத்த மகன் ஹரிலாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் “நாட்டின் விடுதலையை விட, உனது பிரச்சனை எனக்கு மிகவும் கடினமான பிரச்சனையாக உள்ளது என்பது உனக்கு தெரிந்திருக்கும்”. "மனு(ஹரிலாலின் மகள்) உன் ஆபத்தான விஷயங்களை என்னிடம் கூறியுள்ளார். மனுவை நீ பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளாள். இதனால் காயம் அடைந்த மனு மருத்துவ சிகிச்சையும் பெற்றுள்ளார்" என்று வருத்தத்துடன் எழுதியுள்ளார். மகாத்மா காந்தியுடன் சபர்மதி ஆசிரமத்தில் மனு தங்கவந்தபோது இந்த தகவலை அவரிடம் கூறியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த கடிதங்கள் அனைத்து குஜராத் மொழியில் எழுதப்பட்டுள்ளது. தற்போது நல்ல நிலையில் உள்ளது. காந்தியின் வம்சாவளி வழியாக அவரது குடுபத்தின் ஒரு கிளையில் இருந்து தற்போது வெளியே வந்துள்ளது. அவர்கள் இந்த கடிதத்தை இதற்கு முன்னதாக பொதுஇடத்தில் வைத்து பார்த்திருக்க மாட்டார்கள் என்று கருதுகிறோம். தற்போது காந்தி மற்றும் அவரது மகனுக்கு இடையில் இருந்த வருத்தம் நிறைந்த உறவு குறித்து அவர்கள் குறிப்பிடத்தக்க புதிய தகவல்களை கொடுத்துள்ளனர்" என்று கடிதங்களை ஏலம் விட உள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment